Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ எஸ்.ஐ.ஆர்., படிவம் சமர்ப்பிக்க வரும் 11ம் தேதி வரை அவகாசம்

 எஸ்.ஐ.ஆர்., படிவம் சமர்ப்பிக்க வரும் 11ம் தேதி வரை அவகாசம்

 எஸ்.ஐ.ஆர்., படிவம் சமர்ப்பிக்க வரும் 11ம் தேதி வரை அவகாசம்

 எஸ்.ஐ.ஆர்., படிவம் சமர்ப்பிக்க வரும் 11ம் தேதி வரை அவகாசம்

ADDED : டிச 01, 2025 12:47 AM


Google News
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான அவகாசத்தை, தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மாநிலம் முழுதும் நடந்து வருகிறது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதுடன், அதை பூர்த்தி செய்து திரும்ப பெற, வரும் 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மொத்தமுள்ள, 6.41கோடி வாக்காளர்களில், 6.30 கோடி வாக்காளர்களுக்கு மேல், கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், 5.22 கோடி அளவிற்கு திரும்ப பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இப்பணியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தமிழகம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணியை எளிமையாக்க வேண்டும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதை ஏற்ற தேர்தல் கமிஷன், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணிக்கான அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட

தொடர்ச்சி 7ம் பக்கம்

விண்ணப்ப படிவங்களை, திரும்ப ஒப்படைப்பதற்கான அவகாசம் வரும் 4ல் இருந்து 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அட்டவணை முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதமும் எழுதியுள்ளது.

இதற்கிடையில், எஸ்.ஐ.ஆர்., பணியில் நேற்று முன்தினம் நிலவரப்படி, 51 கோடி வாக்காளர்களுக்கான கணக்கெடுப்பு படிவங்களில், 99.53 சதவீதம் வினியோகிக்கப்பட்டு உள்ளன என்றும், அவற்றில், 78.97 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து, 12 மாநிலங்களிலும், இறந்ததாக கூறப்படும் 18.70 லட்சம் வாக்காளர்கள் உட்பட, 35 லட்சம் பேரை நீக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அட்டவணை செயல்பாடு பழையது புதியது வாக்காளர் கணக்கெடுப்பிற்கான காலம் நவ., 4 முதல் டிச., 4 வரை டிச., 4 முதல் டிச., 11 வரை ஓட்டுச்சாவடி நிலையங்கள் மறு சீரமைப்பு டிச., 4 டிச., 11 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு டிச., 9 டிச., 16 வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் டிச., 9 முதல் ஜன., 1 வரை டிச., 16 முதல் ஜன., 15 வரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பிப்., 7 பிப்., 14







      Our Apps Available On




      Dinamalar

      Follow us