ராமேஸ்வரம், திருப்புல்லாணி கோயிலில் கவர்னர் சுவாமி தரிசனம், தூய்மை பணி
ராமேஸ்வரம், திருப்புல்லாணி கோயிலில் கவர்னர் சுவாமி தரிசனம், தூய்மை பணி
ராமேஸ்வரம், திருப்புல்லாணி கோயிலில் கவர்னர் சுவாமி தரிசனம், தூய்மை பணி
ADDED : ஜன 16, 2024 11:04 PM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆகிய இடங்களில் தமிழக கவர்னர் ரவி, மனைவி லட்சுமியுடன் சுவாமி தரிசனம் செய்தார். ராமேஸ்வரம் கோயில் வீதியில் கவர்னர் துாய்மை பணியில் ஈடுபட்டார்.
நேற்று ராமநாதபுரத்திற்கு வந்த தமிழக கவர்னர் ரவியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வரவேற்றார். வேட்டி, சட்டை அணிந்து கவர்னர் மனைவி லட்சுமியுடன் காலை 10:30மணிக்கு திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
ஆதிஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், தர்ப்ப சயனராமர், சந்தான கோபால கிருஷ்ணர், பட்டாபிஷேக ராமர் சன்னதிகளில்கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார்.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோசாலையில் இருந்த பசுக்களுக்கு அகத்திக் கீரையை கவர்னர், அவரது மனைவியும் வழங்கினர்.
அங்கிருந்து காலை 11:40 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு கவர்னர் வந்தார். அவரை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் கோயில் குருக்கள் கோடி தீர்த்தத்தை தெளித்து வரவேற்றனர். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் பங்கேற்றார்.
மதியம் 12:20 மணிக்கு துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக கோயில் கிழக்கு ரதவீதியில் கவர்னர் தனது மனைவியுடன் துாய்மை பணி செய்தார். அதன் பிறகு விருந்தினர் மாளிகைக்கு சென்று, அங்கு மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மதியம் 12:50 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்தில் ஓய்வு எடுத்து மதியம் 2:50மணிக்கு காரில் மதுரை சென்றார்.
15 பேர் கைது
கவர்னர் ------------திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலுக்கு சென்ற போது கருப்புக்கொடி காட்ட முயன்ற நாகேசுவரன், பாவெல், ஆதித்தமிழர் கட்சி மண்டல செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.


