நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 06, 2024 06:01 PM

சென்னை: ‛‛ நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்'' என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதித்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ‛‛ நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அரசியல் கட்சியினரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஸ்டிக்கர், கருப்பு கண்ணாடி ஒட்டிய வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். இந்த வழக்கில் வரும் 20 ல் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக வேண்டும்'' எனக்கூறி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.