தொடரும் கள்ளச்சாராய மரணம்: இ.பி.எஸ்., அன்புமணி கண்டனம்
தொடரும் கள்ளச்சாராய மரணம்: இ.பி.எஸ்., அன்புமணி கண்டனம்
தொடரும் கள்ளச்சாராய மரணம்: இ.பி.எஸ்., அன்புமணி கண்டனம்
UPDATED : ஜூலை 04, 2024 03:22 PM
ADDED : ஜூலை 04, 2024 02:26 PM

சென்னை: 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள், விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மரக்காணம், கருணாபுரம் சம்பவத்திற்கு பிறகும் முதல்வர் ஸ்டாலின் பாடம் கற்றுக்கொள்ளவில்லை' என அதிமுக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக., தலைவர் அன்புமணி, கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
அவரது அறிக்கை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
சம்மந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்ட, பிறகும், இந்த திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் ஸ்டாலின் கற்றுக்கொள்ளவில்லை.
உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?. கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.