ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்கு பின் முடிவு சொல்கிறார் காங்.,எம்.பி., கார்த்தி
ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்கு பின் முடிவு சொல்கிறார் காங்.,எம்.பி., கார்த்தி
ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்கு பின் முடிவு சொல்கிறார் காங்.,எம்.பி., கார்த்தி
ADDED : செப் 15, 2025 01:57 AM
திருச்சி, அரியலுாருக்கு நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூட்டத்திற்கு வரவேற்பு இருந்ததை மறுக்கமுடியாது. அவருக்கு தொண்டர்கள், ரசிகர்கள் என தானாக கூட்டம் சேர்ந்தது. இந்த கூட்டம் ஓட்டாக மாறி எத்தனை தொகுதிகளை வரும் தேர்தலில் பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குறிப்பாக 35 வயதிற்கு உட்பட்டவர்கள் அரசியல் கட்சி பற்று இன்றி, புதிதாக கட்சி துவங்கியவர் பின்னால் நிற்க விரும்புகின்றனர். தேர்தல் வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்றி விட்டதா என விஜய் கேட்கிறார். மத்திய, மாநில அரசுகள் எதுவாக இருந்தாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். மகளிர் உரிமை தொகை இன்னும் பெரும்பாலானவர்களுக்கு சென்று சேரவில்லை. அவர்களுக்காக தான் முகாம் நடக்கிறது.
ஆளுங்கட்சிக்கு எதிராக தான் புதிதாக கட்சியை துவக்குவார்கள். 2006 ல் தமிழக அமைச்சரவையில் காங்.,க்கும் பங்கு கிடைப்பதை தவிர்த்துவிட்டோம். 2026 சட்டசபை தேர்தலில் காங்., எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்தே தி.மு.க., கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
-கார்த்தி காங்., எம்.பி.,