பா.ஜ.,வுக்கு துணை போவோரை புறக்கணிக்க முஸ்லிம்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
பா.ஜ.,வுக்கு துணை போவோரை புறக்கணிக்க முஸ்லிம்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
பா.ஜ.,வுக்கு துணை போவோரை புறக்கணிக்க முஸ்லிம்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
ADDED : செப் 22, 2025 01:58 AM

சென்னை: சென்னையில் நடந்த, நபிகள் நாயகம் 1,500வது பிறந்த நாள் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நபிகள் நாயகம் அன்பை, அமைதியை போதித்தார். அவரது பிறந்த நாளில், காஸாவில் நடக்கும் துயரத்தை பார்த்து, யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. பாலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
மிலாது நபியை, தி.மு.க., அரசு தான் விடுமுறை நாளாக அறிவித்தது.
அதை 2001ம் ஆண்டு, அ.தி.மு.க., அரசு ரத்து செய்தது. மீண்டும் 2006ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், அது நடைமுறைப்படுத்தப்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு, தி.மு.க., அரசு பல்வேறு கோரிக்கை களை நிறை வேற்றி தந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தற்போதைய தி.மு.க., ஆட்சியில், ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. முஸ்லிம்கள் வைக்கும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்.
அவர்களுக்கு இடர் வந்தால், தி.மு.க.,வும் அரசும் துணை நிற்கும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தி.மு.க.,தான் போராடியது.
போராடியவர்கள் மீது தடியடி நடத்தியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். முத்தலாக் சட்டம் வந்தபோது, அ.தி.மு.க., இரட்டை வேடம் போட்டது.
தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் நடத்திய சட்ட போராட்டத்தால், வக்பு திருத்த சட்டத்தில், முக்கிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை போட்டுள்ளது.
மத்திய பா.ஜ., அரசின் மலிவான, ஏதேச்சதிகார அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.