/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/முன்னோர்களுக்கு தர்ப்பணம்;நீர்நிலைகளில் மக்கள் வழிபாடுமுன்னோர்களுக்கு தர்ப்பணம்;நீர்நிலைகளில் மக்கள் வழிபாடு
முன்னோர்களுக்கு தர்ப்பணம்;நீர்நிலைகளில் மக்கள் வழிபாடு
முன்னோர்களுக்கு தர்ப்பணம்;நீர்நிலைகளில் மக்கள் வழிபாடு
முன்னோர்களுக்கு தர்ப்பணம்;நீர்நிலைகளில் மக்கள் வழிபாடு
ADDED : செப் 22, 2025 01:58 AM
ஒகேனக்கல்:தை, ஆடி, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை நாட்களில் மக்கள், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வந்து காவிரியாற்றில் முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று, ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரியாற்றின் கரையில் பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் பூஜை பொருட்களை காவிரியாற்றில் விட்டு புனித நீராடி சென்றனர்.
* மகாளய அமாவாசையையொட்டி நேற்று, அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள ராமர், கவுரி உள்ளிட்ட, 5 தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். அதே போல், இருமத்துார், டி.அம்மாபேட்டை ஆகிய இடங்களில் தென்பெண்ணையாறு கரையோரம் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தேங்காய், பழம், எள், அரிசி படையலிட்டு திதி கொடுத்து வழிபட்டனர்.