சீன விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு கோர்ட் ஜாமின்
சீன விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு கோர்ட் ஜாமின்
சீன விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு கோர்ட் ஜாமின்
ADDED : ஜூன் 06, 2024 01:22 PM

புதுடில்லி: சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரத்திற்கு டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் ஜாமின் வழங்கியது.
2011 ல் இவரது தந்தை ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்கு வர சீன நாட்டவர்கள் 263 பேருக்கு விசா வழங்கிட கார்த்தி உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்தது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல முறை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாமின் கேட்டு சிபிஐ சிறப்பு கோர்ட்டில் கார்த்தி ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் கார்த்தி சிதம்பரம் 2, 05, 664 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.