ADDED : மார் 23, 2025 02:01 AM
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி அருள்குமார், 32. இவரது மகன் பரத், 8; அப்பகுதியில், அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
அருள்குமாரின் உறவினர் ராஜா மகன் தேவனேஷ், 4. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், பரத், தேவனேஷ், அப்பகுதியில் உள்ள ஏரி அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றனர். நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பவில்லை.
சேத்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏரியில் அவர்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பின், சிறுவர்கள் இருவரையும் சடலமாக மீட்டனர். சேத்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.