Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மாணவ - மாணவியர் விடுதிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

மாணவ - மாணவியர் விடுதிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

மாணவ - மாணவியர் விடுதிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

மாணவ - மாணவியர் விடுதிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

ADDED : செப் 23, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
சென்னை; சென்னை உட்பட எட்டு இடங்களில், 61 கோடி ரூபாயில், சமூக நீதி மாணவ - மாணவியர் விடுதிகள் கட்டப்பட உள்ளன. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டம் வி.பெருமாள்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளியில், 1.77 கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்; அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டியில், 2.17 கோடியில் பள்ளி மாணவர்கள் விடுதி கட்டப்பட்டு உள்ளது.

சென்னை எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், 3.14 கோடி ரூபாயில், குதிரை லாயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை உட்பட, 97 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

காவலர் குடியிருப்பு அத்துடன், புதிதாக உருவாக்கப்பட்ட விழுப்புரம் மண்டல தீயணைப்பு அலுவலகம், திருப்பத்துார் தீயணைப்பு நிலையம் போன்றவற்றையும் திறந்து வைத்தார்.

சென்னை ராணி மேரி கல்லுாரி, செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, மதுரை சாந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகிய இடங்களில் தலா ஒன்று, திருவையாறில் இரண்டு என, எட்டு இடங்களில், 61.44 கோடி ரூபாயில், சமூகநீதி மாணவ - மாணவியர் விடுதிகள்.

செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில், 21.8 கோடி ரூபாயில், தீயணைப்பு துறைக்கு மாநில பயிற்சி கழகம்; ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டையில், 55.6 கோடி ரூபாயில், 342 காவலர் குடியிருப்புகள்; செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி, தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் பகுதியில், போலீஸ் நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, அரசு கள்ளர் பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட, 23 பட்டதாரி மற்றும், 18 இடைநிலை ஆசிரியர்களுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு, தமிழ் வளர்ச்சி துறையில் உதவி இயக்குநர் பணிக்கும், பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கி னார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us