Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அண்ணாமலை

முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அண்ணாமலை

முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அண்ணாமலை

முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அண்ணாமலை

ADDED : ஜன 03, 2024 11:22 PM


Google News
சென்னை:'நலிவடைந்த பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய் மின் திட்டத்தை செயல்படுத்த, தி.மு.க., அனுமதி அளித்துவிட்டு, 'பெல்' ஆர்டரை நம்பியிருக்கும் சிறு நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் நீலி கண்ணீர் வடிக்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பிரதமர் நரேந்திர மோடி, திருச்சியில், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் முடிவுற்றதை துவக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மத்திய அரசின் பெல் நிறுவனத்தை சார்ந்திருக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு, முந்தைய காலங்களை போல் இல்லாமல், தற்போது ஆர்டர்கள் குறைந்துள்ளன. அதனால், பெல் நிறுவனத்துக்கு ஆர்டர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 2021ல் மின் வாரியத்தின் அனல் மின் திட்ட ஒப்பந்தம், தனியார் நிறுவனமான பி.ஜி.ஆர்., எனர்ஜி நிறுவனத்திற்கு விதிகளை மீறி வழங்கப்பட்டது. இதுவரை, அத்திட்ட பணியில் முன்னேற்றம் இல்லை.

அந்த டெண்டரில் பங்கேற்ற மற்றொரு நிறுவனமான பெல் நிறுவனத்தை, தமிழக அரசு பரிசீலிக்கவில்லை. பெல் தொழிற்சங்கங்கள், பி.ஜி.ஆர்., எனர்ஜி உடனான ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்படுத்துவது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

பி.ஜி.ஆர்., போன்ற நலிவடைந்த நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்ற, தி.மு.க., அரசு அனுமதி அளித்தது. ஆனால் இன்று, பெல் ஆர்டர்களை நம்பியிருக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக, ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இந்த நிலைக்கு தாங்கள் தான் காரணம் என்பதைகூட, தி.மு.க., இன்னும் உணரவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us