ADDED : ஜூலை 19, 2024 05:34 AM

கோழிக்கோடு: கேரளாவில் பல மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதில், 29 வீடுகள் சேதமடைந்தன. 700 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, வயநாடு, கண்ணுார் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், 20 செ.மீ., மழை கொட்டும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.