சென்னை பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு
சென்னை பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு
சென்னை பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு
ADDED : பிப் 12, 2024 05:56 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரம் திரும்பிய சென்னையை சேர்ந்த பக்தர் சேகர் 60, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சென்னை சிட்லபாக்கம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் சேகர் 60, இவர் நேற்று முன்தினம் காலை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்தார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தாணிப்பாறை அடிவாரம் திரும்பும் போது மாங்கனி ஓடை அருகே நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.