இந்தியாவில் பாதிபேர் உடல் உழைப்பு இல்லாத சோம்பேறிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் பாதிபேர் உடல் உழைப்பு இல்லாத சோம்பேறிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் பாதிபேர் உடல் உழைப்பு இல்லாத சோம்பேறிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ADDED : ஜூன் 27, 2024 12:29 PM

புதுடில்லி: இந்தியாவில் பாதி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாததால், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள உடற்தகுதியை பெறவில்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் வயது வந்தவர்கள் மத்தியில் போதி உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2022ல் 49.4 சதவீதமாக உள்ளது. அதில், பெண்கள் 57 சதவீதம் பேர். ஆண்கள் 49 சதவீதம் பேர். உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2000 ல் 22.4 சதவீதமாக இருந்தது. இது குறித்து 195 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்து உள்ளது.
இது சரி செய்யப்படாமல் இருந்தால், 2030 ல் 59.9 சதவீதம் பேர் போதிய உடற்தகுதி இல்லாமல் இருப்பார்கள். இதனால், உடல்நலக்குறைவு மற்றும் நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உலகளவில் 180 கோடி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர். பசிபிக் பிராந்தியத்தில் 48 சதவீதம், தெற்கு ஆசியாவில் 45 சதவீதம், மேற்கத்திய நாடுகளில் அதிகம் வருமானம் கொண்ட நாடுகளில் 28 சதவீதம் பேர் உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர்.
பெண்கள்
போதிய உடல் உழைப்பு இல்லாத பெண்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் நாடுகள் உள்ளன. அதேநேரத்தில் வங்கதேசம், பூடான் மற்றும் நேபாளத்தில் பெண்கள் உரிய உடற்தகுதி உடன் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.