மகளுடன் நடந்த சென்ற தாயை முட்டித் தள்ளிய மாடு; பகீர் கிளப்பிய வீடியோ
மகளுடன் நடந்த சென்ற தாயை முட்டித் தள்ளிய மாடு; பகீர் கிளப்பிய வீடியோ
மகளுடன் நடந்த சென்ற தாயை முட்டித் தள்ளிய மாடு; பகீர் கிளப்பிய வீடியோ
ADDED : மார் 15, 2025 02:09 PM

சென்னை: சென்னை அருகே மகளுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த தாயை மாடு முட்டித் தள்ளிய வீடியோ பார்ப்போரை திகிலடைய வைத்துள்ளது.
கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது மகளுடன் அங்குள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே தெருவில் மாடு ஒன்றும் சென்று கொண்டிருந்தது.
மாட்டை பார்த்ததும் சந்றே மிரண்ட தாய், மகளை எதிர்திசையில் கைகளை பிடித்தவாறு அழைத்துச் சென்றார். அப்போது நொடிக்கும் குறைவான இடைவெளியில் மாடு சிறுமியை முட்டித் தள்ள எத்தனித்தது.
மகளை காப்பாற்ற, தாய் முயற்சிக்க, அவரை மாடு முட்டியது. இதை கண்ட அங்குள்ளவர்கள், கையில் கிடைத்த பொருட்களை கொண்டு மாட்டை விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ பகுதிக்குச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மாட்டை பிடித்தனர். மாட்டின் உரிமையாளர் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.