பயணிகள் கனிவான கவனத்திற்கு; சென்னை-ஆவடி இரவு ரயில் சேவை திடீர் ரத்து
பயணிகள் கனிவான கவனத்திற்கு; சென்னை-ஆவடி இரவு ரயில் சேவை திடீர் ரத்து
பயணிகள் கனிவான கவனத்திற்கு; சென்னை-ஆவடி இரவு ரயில் சேவை திடீர் ரத்து

சென்னை: மார்ச் 28ம் தேதி வரை சென்னை, ஆவடி இடையே புறநகர் இரவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
ஆவடி ரயில்வே பணிமனையில் மார்ச் 26ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அந்த நாட்களில் சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு ஆவடி செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பகுதியில் இருந்து மார்ச் 26 மற்றும் மார்ச் 27 தேதிகளில் இரவு 7.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.