விஜய்க்கு மாலை அணிவித்த 4 பேர் மீது வழக்கு
விஜய்க்கு மாலை அணிவித்த 4 பேர் மீது வழக்கு
விஜய்க்கு மாலை அணிவித்த 4 பேர் மீது வழக்கு
ADDED : செப் 23, 2025 07:27 AM

திருவாரூர் : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 20ம் தேதி திருவாரூர் சென்றார். நாகப்பட்டினத்தில் இருந்து, திருவாரூர் சென்ற அவரை வரவேற்ற த.வெ.க.,வினர், கிரேன் வாயிலாக மிக பிரமாண்டமான மாலையை விஜய்க்கு அணிவித்தனர்.
இந்நிலையில், விஜய்க்கு மாலை அணிவித்த திருவாரூர் வடக்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதன், கிரேன் உரிமையாளர் ராஜேஷ் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.