/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 23, 2025 07:32 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த முதலாம் ஆண்டு இளம் கலை மருத்துவ படிப்பு வகுப்புகள் துவக்க விழாவிற்கு டீன் லுாசி நிர்மல் மெடோனா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார்.
முன்னதாக முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லுாரி டீன், துறை பேராசிரியர்கள் சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கல்லுாரி துணை முதல்வர் தாரணி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, நிர்வாக அதிகாரிகள் சரவணன், சக்திவேல், இளநிலை உதவியாளர் தென்றல் அரசு, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.