/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நுாறுநாள் வேலை கேட்டு கிராம மக்கள் மறியல் நுாறுநாள் வேலை கேட்டு கிராம மக்கள் மறியல்
நுாறுநாள் வேலை கேட்டு கிராம மக்கள் மறியல்
நுாறுநாள் வேலை கேட்டு கிராம மக்கள் மறியல்
நுாறுநாள் வேலை கேட்டு கிராம மக்கள் மறியல்
ADDED : செப் 23, 2025 07:33 AM
செஞ்சி : சொரத்துார் கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வல்லம் அடுத்த சொரத்துார் ஊராட்சியில் நேற்று மழையின் காரணமாக ஓடையில் தண் ணீர் சென்றது.
இதனால் 100 நாள் வேலையை ஊராட்சி நிர்வாகத்தினர் ரத்து செய்து வேலைக்கு வந்த கிராம மக்களை திரும்பி போகும்படி அறிவுறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செஞ்சி - திருவம்பட்டு சாலையில் காலை 10:20 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், வல்லம் பி.டி.ஓ., சிலம்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வேலை வழங்குவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து 11:00 மணியளவில் மறியலை கைவிட்டனர்.