வழிகாட்டு மதிப்பு குறித்த ஐ.ஜி., சுற்றறிக்கை ரத்து
வழிகாட்டு மதிப்பு குறித்த ஐ.ஜி., சுற்றறிக்கை ரத்து
வழிகாட்டு மதிப்பு குறித்த ஐ.ஜி., சுற்றறிக்கை ரத்து
ADDED : ஜன 04, 2024 11:13 PM
கடந்த ஆண்டு மார்ச் 30ல், பத்திரப்பதிவு ஐ.ஜி., பிறப்பித்த சுற்றறிக்கையில், சொத்துக்களுக்கான வழிகாட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'கிரெடாய்' அமைப்பு மற்றும் இரு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:
வழிகாட்டு மதிப்பை மாற்றி அமைக்கும்போது, நிபுணர் குழுவின் அறிக்கை பெற வேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆட்சேபனைகளை பெற வேண்டும். விதிகளின்படி, மதிப்பீட்டுக் குழு ஏற்படுத்த வேண்டும். அதில், நிபுணர்கள் இடம்பெற வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கையையும், மக்களிடம் பெறும் கருத்துக்களையும் பரிசீலித்த பிறகுதான் மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்.
இந்த நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் வழிகாட்டு மதிப்பு நிர்ணயம் செய்து சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே பத்திரப்பதிவு ஐ.ஜி., பிறப்பித்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் வரை, 2017ல் வகுக்கப்பட்ட வழிகாட்டு மதிப்பை அரசு பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.