மானிய விலையில் மீன் குஞ்சு மீன் வளர்ப்போருக்கு அழைப்பு
மானிய விலையில் மீன் குஞ்சு மீன் வளர்ப்போருக்கு அழைப்பு
மானிய விலையில் மீன் குஞ்சு மீன் வளர்ப்போருக்கு அழைப்பு
UPDATED : ஜூலை 04, 2025 10:30 AM
ADDED : ஜூலை 04, 2025 12:55 AM

சென்னை:'மீன் பண்ணை வைத்திருப்போருக்கு, மானிய விலையில் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு ஒரு கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது' என, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுதும், உள்நாட்டு மீன்களை வளர்க்க விரும்புவோர், தங்கள் நிலங்களில் மீன் பண்ணை அமைத்தால், மீன்வளத் துறை சார்பில், மீன் குஞ்சுகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இதன் வாயிலாக புதிய தொழில் முனைவோரை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பாண்டு மீன் பண்ணை அமைப்போருக்கு, 50 லட்சம் ரூபாயில், ஒரு கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எட்டு மாதங்களுக்கு பின் நல்ல விலைக்கு விற்கலாம்
சென்னை தவிர, தமிழகம் முழுதும் உள்ள 37 மாவட்டங்களில் செயல்பட்டு வரும், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ளவர்கள், தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து, அரசு திட்டங்களை பெற்று வருகின்றனர். மீன் வளர்ப்போர், மீன் குஞ்சுகளை கொள்முதல் செய்ய, அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
அதிகபட்சமாக 10,000 மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 1 ஏக்கரில் மீன் வளர்க்க விரும்புவோருக்கு, 3,000 மீன் குஞ்சுகள் வழங்கப்படும்.
மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை மற்றும் ரகத்தை பொறுத்து, அதன் விலை மாறுபடும். எட்டு மாதங்கள் வளர்த்த பின், அவற்றை நல்ல விலைக்கு விற்கலாம்.
இத்திட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற, அருகில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
- மீன்வளத்துறை அதிகாரிகள்