வரி குறைந்ததும் தங்கம் விலை மங்குது: மக்கள் மனசு பொங்குது
வரி குறைந்ததும் தங்கம் விலை மங்குது: மக்கள் மனசு பொங்குது
வரி குறைந்ததும் தங்கம் விலை மங்குது: மக்கள் மனசு பொங்குது
UPDATED : ஜூலை 23, 2024 06:45 PM
ADDED : ஜூலை 23, 2024 03:12 PM

சென்னை: சுங்க வரி குறைக்கப்பட்டதால், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, தங்கம், வெள்ள விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இது எப்போது நடக்கும் என எதிர்பார்த்த மக்கள், அடுத்த சில மணி நேரங்களில் மகிழ்ச்சியான செய்தி வெளிவரத் துவங்கியது.
அதன்படி, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,080 குறைந்து ரூ.52,400 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.260 ஆகவும், ரூ.6,550 ஆகவும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.3,100 குறைந்து ரூ.92,500 ஆக விற்பனை ஆகிறது.