''ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் சசிகலா, ஓபிஎஸ்'': ஜெயக்குமார்
''ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் சசிகலா, ஓபிஎஸ்'': ஜெயக்குமார்
''ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் சசிகலா, ஓபிஎஸ்'': ஜெயக்குமார்
ADDED : ஜூலை 11, 2024 12:44 PM

சென்னை:
''கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா
ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள்'' என அதிமுக முன்னாள்
அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சேலத்தில் உள்ள இ.பி.எஸ்
இல்லத்தில் அதிமுக.,வை ஒருங்கிணைக்க 6 முன்னாள் அமைச்சர்கள் 2 நாட்களாக
ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இது பற்றி செய்தியாளர்களிடம் அதிமுக
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: கட்சியில் இருந்து
வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தொண்டர்களின்
ரத்தம் உறிஞ்சிய அட்டைகள். அவர்களை கட்சிக்குள் ஒருங்கிணைக்க இபிஎஸ்
திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு என்ற
மாயையை திரைக்கதை எழுதி, வசனமும் சேர்த்து யாரோ சிலர் பரப்புகின்றனர்.
ஓபிஎஸ்.,-ன் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை என்ன? என்னையும், இ.பி.எஸ்.,சையும்
ஜெயலலிதா அடையாளம் காட்டினார். ஆனால் ஓபிஎஸ்.,சை தினகரன் அடையாளம்
காட்டினார். கோயிலாக பார்க்கப்படும் ஒரு கட்சி அலுவலகத்தை தாக்கி
உடைக்கலாமா? ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் முயற்சியில் ஓபிஎஸ்
இருக்கிறார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.