அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்
அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்
அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்
ADDED : மே 16, 2025 06:36 AM

சென்னை: சட்டசபை தேர்தலில், அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வகையில், 40 தொகுதிகள் வரை பெற, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது, மத்தியில் பா.ஜ., ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆளுங்கட்சிகளாக இருந்ததால், இரட்டை இலக்க வெற்றியை, பா.ஜ., மேலிடம் எதிர்பார்த்தது. ஆனால், நான்கு தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்றது.
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, 3 சதவீதத்தில் இருந்து, 11 சதவீதமாக உயர்ந்தது.
தற்போது, அனைத்து தொகுதியிலும் பா.ஜ.,வுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட, பா.ஜ., விரும்புகிறது. மாவட்டத்திற்கு ஒன்று வீதம், மாநிலம் முழுதும் பரவலாக, 40 தொகுதிகளில் களமிறங்க வேண்டும் என கருதுகிறது.
சிறிய கட்சிகள், பா.ஜ., சின்னத்தில் போட்டியிட விரும்பினால், அ.தி.மு.க.,விடம் இருந்து கூடுதலாக, 10 தொகுதிகள் பெற்று, அவற்றுக்கு ஒதுக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், 50 தொகுதிகளை அடையாளம் காணும் பணியை தமிழக பா.ஜ., மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.