பக்ரீத் ஸ்பெஷல்: ஒரே கல்லில் மூன்று மாங்காய்
பக்ரீத் ஸ்பெஷல்: ஒரே கல்லில் மூன்று மாங்காய்
பக்ரீத் ஸ்பெஷல்: ஒரே கல்லில் மூன்று மாங்காய்
ADDED : ஜூன் 06, 2025 07:13 PM

ஹனீப் குழப்பத்தின் உச்சியில் இருந்தார். ஹஜ் பயணத்துக்காகப் பணம் சேர்த்து வைத்திருந்தார். கைபேசி சிணுங்கியது. எடுத்து காதில் ஒற்றினார். மறுமுனையில் அவருடைய சகோதரர் சுபான்.
''சொல்லு தம்பி...''
''என் பொண்ணு சுலைகாவுக்கு திடீர்னு வெளிநாட்டு மாப்பிள்ளை வரன் வந்திருக்கு அண்ணே. மாப்பிள்ளை வீட்டார் நிக்காஹ்வுக்கு அவசரப்படுத்துறாங்க. என் கையில் வேறு காசு இல்லை. என்ன செய்யறதுன்னு புரியலை...'' சுபான் குரலில் பதற்றம் தெரிந்தது.
ஒரு கணம் யோசித்த ஹனீப், ''உடனே ஆகவேண்டிய வேலைகளைத் தொடங்கு. சுலேகாவுடைய திருமணத்துக்கான மொத்த செலவும் என்னுடையது. நாளை காலை வந்து பணத்தை வாங்கிட்டு போ...'' என்று சொல்லி விட்டு செல்லைத் துண்டித்தார்.
அவருக்கு தெரியும், ஹஜ்ஜுக்காக சேர்த்து வைத்த பணத்தில் ஓர் ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தால் ஹஜ் நிறைவேற்றிய புண்ணியம் கிடைக்கும் என்று.
ஹஜ் கடமை நிறைவேற்றியது போலவும் இருக்கும். ஹஜ்ஜில் ஓர் ஆட்டை குர்பானி கொடுத்தது போலவும் இருக்கும்; ஒரு பெண்ணின் திருமணமும் நடந்தேறும்.
ஆக, ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்த திருப்தி ஹனீப் முகத்தில் பரவியது.
- -மலர்மதி