அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு விருது
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு விருது
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு விருது
ADDED : மார் 23, 2025 06:43 AM

புதுச்சேரி : விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு 'அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்வியில் சிறந்து விளங்கும் கல்லுாரி' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், கல்வி தரத்திலும் சேவையிலும் திறம்பட செயலாற்றும் கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக, கற்றல் விருதுகள் என்ற பெயரில், விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இவ்வாண்டு சென்னையில் நடந்த விழாவில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் பங்கேற்று, விருது வழங்கினார். இதில், விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு 'அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்வியில் சிறந்து விளங்கும் கல்லுாரி' என்ற விருது வழங்கி, அங்கீகரிக்கப்பட்டது. இவ்விருதினை துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து துறையின் டீன் செந்தில்குமார் கூறியதாவது:
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியானது 2002ம் ஆண்டு துவக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு புதுமைகளை புகுத்தி, சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டு வருகிறது.
இத்தகைய 23 ஆண்டு கால கல்வி சேவையினையும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வித் தரத்தினையும் ஆராய்ந்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
இவ்விருதினை பெறுவதற்கு சிறந்த பங்களிப்பினை ஆற்றி வரும் துறையின் டீனுக்கு பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணைத் தலைவர் அனுராதா கணேசன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.