சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் நியமனம்: விண்ணப்பம் வரவேற்பு
சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் நியமனம்: விண்ணப்பம் வரவேற்பு
சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் நியமனம்: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 30, 2025 07:21 PM
சென்னை: சென்னை மாநகராட்சியில் இரண்டு மாற்றுத்திறனாளி கவுன்சிலர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது.இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களாக நியமிப்பதற்கு மாற்றுத்திறனாளி நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.நியமனம் செய்யப்பட உள்ள நபர்களில் தலா ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நபர் எனவும், இதற்கான விண்ணப்ப படிவங்களை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் நாளை ( ஜூலை 1 ) முதல் 17 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசித்து வருபவர்கள், அந்த விண்ணப்பத்தை மாநகராட்சி கமிஷனரிடம் 17 ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனக்கூறப்பட்டு உள்ளது.