கள்ளச்சாராய தடுப்பு: கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
கள்ளச்சாராய தடுப்பு: கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
கள்ளச்சாராய தடுப்பு: கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
ADDED : ஜூன் 21, 2024 05:42 PM

சென்னை: முதல்வர் ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார். கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்தனர். 168 பேர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அவசரமாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கள்ளச்சாராய ஒழிப்பு, மெத்தனால் கடத்தலை தடுப்பது, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.