சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு : 31 மாத இடைவெளிக்கு பின் சட்டசபைக்குள் நுழைந்தார்
சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு : 31 மாத இடைவெளிக்கு பின் சட்டசபைக்குள் நுழைந்தார்
சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு : 31 மாத இடைவெளிக்கு பின் சட்டசபைக்குள் நுழைந்தார்
UPDATED : ஜூன் 21, 2024 06:42 PM
ADDED : ஜூன் 21, 2024 06:36 PM

அமராவதி: வந்தால் முதல்வராக தான் இந்த சட்டசபைக்கு வருவேன் என சபதமிட்டு சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் சபதத்தை நிறைவேற்றிய உற்சாகத்தில் 31 மாத இடைவெளிக்கு பின் முதல்முறையாக சட்டசபைக்கு வந்தார்.
பாராளுமன்ற லோக்சபாவுடன் ஆந்திர சட்டசபைக்கும் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 171 இடங்களில் 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த 12-ம் தேதி பதவியேற்றார்.
முன்னர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது தன்னையும் , தன் குடும்பத்தையும் அப்போதைய ஓய்.எஸ்.ஆர்.காங். கட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் அவதூறாக பேசியதால் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது இனி இந்த சபைக்கு வந்தால் முதல்வராகத்தான் நுழைவேன் என சபதமிட்டார்.
இன்று (21.06.2024) ஆந்திர சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது, போட்ட சபதத்தை நிறைவேற்றிய உற்சாகத்தில் 31 மாத இடைவெளிக்குபின் சட்டசபைக்குள் முதல்வராக நுழைந்தார். தொடர்ந்து கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாடினார்.