அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாஸ் முடிவால் அதிர்ச்சி
அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாஸ் முடிவால் அதிர்ச்சி
அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாஸ் முடிவால் அதிர்ச்சி
ADDED : ஜூன் 13, 2025 05:31 AM
சென்னை: பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை, கடந்த ஏப்ரல் 10ல் ராமதாஸ் நீக்கினார். அன்று முதல் தந்தை -- மகன் இடையே சமாதானத்தை ஏற்படுத்த, குடும்பத்தினர், கட்சியினர், நண்பர்கள் என பலரும் முயற்சித்து வந்தனர்.
அதன் பலனாக, தன்னுடைய மகள்வழி பேரன் முகுந்தன், மகள்கள் உட்பட பலருடன் ராமதாஸ் பேச்சு நடத்தினார்.
இதற்கு பலன் கிடைப்பதுபோல அறிகுறி தென்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி, அன்புமணிக்கு நெருக்கமான, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் பாலுவை நீக்கியதன் காரணமாக, நிலைமை மோசமானது.
இந்நிலையில் நேற்று, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பேட்டியளித்த ராமதாஸ். சமாதான முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்தார். தந்தைக்கு பிறகே தனயன். தனக்கு பிறகே அன்புமணி என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதனால், அன்புமணி பக்கம் இருக்கும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்டச்செயலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தந்தை -- மகன் மோதலை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர்கள், கட்சியின் எதிர்காலம் அன்புமணி என்பதால், அவர் பக்கமே நின்றனர்.
ஆனால், 'சட்டசபை தேர்தல் வரை நானே தலைவராக இருப்பேன்' என, ராமதாஸ் அறிவித்துள்ளதால், அடுத்து நம் நிலை என்ன ஆகுமோ என அச்சமடைந்துள்ளனர்.