இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கமல்ஹாசன் பேசியதாவது:
உயிரே உறவே தமிழே வணக்கம், இது வரவேற்புரை அல்ல இருந்தாலும் எல்லோரையும் மறுபடி மறுபடி வரவேற்க வேண்டும்போல் தோன்றுகிறது. நாம் இசையில் நனைந்ததை போல, நமது மண்ணையும் இசை நனைந்திருக்கிறது. அதிக பிரசங்கம் செய்வது நன்றாக இருக்காது. அண்ணன் இளையராஜாவுடன் நான் கடந்து வந்த இந்த 50 வருட நிலையை ஒவ்வொரு வாக்கியமாக சொன்னால் இந்த விழா நேரம் போதாது. அதனால் அவருக்காக நான் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன்.
அதன்பிறகு நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது;
இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக இருந்து கொண்டு, தமிழக அரசியலில் இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கும், புதிய, பழைய எதிர்க்கட்சியினருக்கும் ஒரு சவாலாக இருந்து கொண்டு, வாங்க 2026ல் பார்த்து கொள்ளலாம் என்று தனக்கே உறுதியான புன்னகையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் என் நண்பர் முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம். சிம்பொனி எழுதி இதனை லண்டனில் அரங்கேற்றப் போகிறேன் என்று அறிவித்த உடனே முதல்வர் இளையராஜாவை நேரில் சென்று பாராட்டினார். மேலும், சிம்பொனியை முடித்துக் கொண்டு வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து, பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்தார். அதன்படி, இந்தப் பாராட்டு விழாவை நடத்தியுள்ளார்.
ரஜினி - இளையராஜா அலப்பறை
இருநாட்களுக்கு முன்பு போன் செய்த ரஜினி, நாம் பண்ணியதை அனைத்தும் சொல்லி விடுவேன் என்று கூறினார். நானும், மகேந்திரனும், ரஜினியும் மது அருந்தினோம். அப்போது, அரை பாட்டில் பீர் குடித்து விட்டு ஆடிய ஆட்டம் இருக்கே. அதைப் பற்றி சொல்லி விடுவேன் என்றார், உடனே மேடையில் இருந்து எழுந்து வந்த ரஜினி, 'விஜிபியில் வந்து ஜானி பட கம்போசிங். அங்கு சூட் பண்ணிட்டு இருந்ததால், அங்கேயே தங்கியிருந்தோம். அப்போது, நானும், மகேந்திரனும் மது அருந்தினோம். அப்போது, அங்கு வந்த இளையராஜாவும் அரை பாட்டில் பீர் அடித்தார். 3 மணி வரையில் ஆட்டம் போட்டார். அதன்பிறகு கிசு கிசுக்களை எல்லாம் கேட்டார். குறிப்பாக, ஹீரோயின்ஸ் பத்தி எல்லாம். இன்னும் நிறைய இருக்கு,' என்றார். இதைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கலகலவென சிரித்தனர்.