ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.558.41 கோடி ஒதுக்கீடு
ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.558.41 கோடி ஒதுக்கீடு
ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.558.41 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜன 31, 2024 12:52 AM
சென்னை:ஊரக உள்ளாட்சிகளுக்கு, 15வது நிதி ஆணைய நிதியில் இருந்து, இரண்டாம் தவணையாக, 558.41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 12,519 ஊராட்சிகள்; 388 ஊராட்சி ஒன்றியங்கள்; 36 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றுக்கு, 15வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, நடப்பாண்டு நிதியாக, கடந்த அக்., 25ம் தேதி 557.98 கோடி ரூபாய், முதல் தவணையாக வழங்கப்பட்டது.
அப்போது, ஆறு ஊராட்சிகளுக்கு முதல் தவணை நிதி 21.39 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படாமல் இருந்தது. அந்த நிதியுடன், அனைத்து ஊராட்சிகளுக்கும் விடுவிக்கப்பட வேண்டிய இரண்டாவது தவணை, 558.20 கோடி ரூபாயை ஒதுக்கும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்று அரசு, 558.41 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இதில், 446.77 கோடி ரூபாய் ஊராட்சிகளுக்கும், 83.73 கோடி ரூபாய், ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 27.91 கோடி ரூபாய் மாவட்ட ஊராட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார்.