அதிமுக உட்கட்சி தேர்தல்: தலையிட தேர்தல் ஆணையம் மறுப்பு
அதிமுக உட்கட்சி தேர்தல்: தலையிட தேர்தல் ஆணையம் மறுப்பு
அதிமுக உட்கட்சி தேர்தல்: தலையிட தேர்தல் ஆணையம் மறுப்பு
ADDED : பிப் 06, 2024 02:59 PM

சென்னை: அதிமுக. உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து, உட்கட்சி தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‛‛ அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை. சர்வாதிகாரமாக நடந்தது. நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்'' எனக்கூறியிருந்தார்.
இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‛‛ அ.தி.மு.க.,வின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை'' எனக்கூறியது.
இதனையடுத்து நீதிபதி, அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி , மனுவை தள்ளுபடி செய்ததுடன் மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டார்.