கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்
கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்
கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்
ADDED : பிப் 29, 2024 11:41 PM
சென்னை:கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் பணிபுரியும் கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு, வெள்ள நிவாரண முன்பணம் வழங்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோருக்கு, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களில், 'ஏ, பி' நிலை பணியாளர்களுக்கு, 4 லட்சம் ரூபாய்; 'சி, டி' பணியாளர்களுக்கு, 2 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்த தொகை, 60 மாதங்களில் அல்லது பணி ஓய்வு நாள் என, இரண்டில் எது குறைவோ, அதற்கு ஏற்ற தவணைகளில் பிடித்தம் செய்ய, அதிகரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


