மகளிர் உரிமைத்தொகை வழங்க கூடுதல் பொறுப்பாளர்கள்
மகளிர் உரிமைத்தொகை வழங்க கூடுதல் பொறுப்பாளர்கள்
மகளிர் உரிமைத்தொகை வழங்க கூடுதல் பொறுப்பாளர்கள்
ADDED : ஜன 03, 2024 11:25 PM
சென்னை:மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, புதிதாக 8 தாசில்தார், 101 துணை தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கி, அரசு உத்தரவிட்டு உள்ளது.
மாதம் தலா 1,000 ரூபாய் அடங்கிய, மகளிர் உரிமைத் தொகையை, இதுவரை, 1.06 கோடி பெண்கள் பெற்று வந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை, 1.13 கோடி பேராக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு இத்தொகையை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எட்டு தாலுகா பெண்களும் சீராக பெரும் வகையில், தாசில்தார்களையும், 101 துணை தாசில்தார்களையும் நியமிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கான உத்தரவை, வருவாய் துறை செயலர் ராஜாராமன் பிறப்பித்து உள்ளார்.