நடிகர்கள் கைதாவது அதிர்ச்சி தருகிறது: திருமா
நடிகர்கள் கைதாவது அதிர்ச்சி தருகிறது: திருமா
நடிகர்கள் கைதாவது அதிர்ச்சி தருகிறது: திருமா
ADDED : ஜூன் 27, 2025 07:22 AM
திருச்சி:“தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணையுமா? என்பது யூகமான கேள்வி,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக உள்ளன. அதில், பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் இடம்பெற்றதாக தெரியவில்லை. தி.மு.க., கூட்டணிக்கு பா.ம.க., வந்தால், வி.சி., இருக்குமா? என்று மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணையுமா? என்பது யூகமான கேள்வி. அப்படி ஒரு நிலை வந்தால் கேட்கலாம். அதே நேரத்தில், பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சிகள் இருக்கும் இடத்தில், வி.சி., இருக்காது, என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.
போதை கலாசாரத்தால் நடிகர்கள் கைதாவது, அதிர்ச்சியான ஒன்று. திரைத்துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, மதுக்கடைகளை மூட வேண்டும். போதை பொருட்களை தடுக்க, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தனியாக உளவுப்பிரிவு இருந்தாலும், தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டு வந்து, இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு, மோடி பக்தர்களின் மாநாடாகத்தான் நடைபெற்றது.
இவ்வாறு கூறினார்.