வெற்று தாள்களுக்கும் கட்டணம் தகவல் அறியும் உரிமையில் அதிர்ச்சி
வெற்று தாள்களுக்கும் கட்டணம் தகவல் அறியும் உரிமையில் அதிர்ச்சி
வெற்று தாள்களுக்கும் கட்டணம் தகவல் அறியும் உரிமையில் அதிர்ச்சி
ADDED : ஜன 03, 2024 09:28 PM
திருப்பூர்:அரசு அலுவலகங்களில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நகல் எடுத்து வழங்க வேண்டிய தகவல் எனில், அதற்குரிய கட்டணத்தை அரசுக் கருவூலத்தில் செலுத்த வேண்டும். அவ்வகையில், திருப்பூரைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர், சப் - கலெக்டர் அலுவலகத்தில், ஒரு விசாரணை தொடர்பான தகவல் கேட்டார்.
தகவல் விபரங்கள், 1,111 பக்கம் உள்ளதால், பக்கத்துக்கு, 2 ரூபாய் வீதம் 2,222 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கலெக்டர் அலுவலகத்தில் மற்றொரு தகவல் கேட்ட போது, 181 பக்கத்துக்கு தலா 5 ரூபாய் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறே கட்டணத்தை செலுத்தி, தகவல் விவரங்களை பெற்ற சரவணக்குமார், அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார்.
சப் - கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய 1,111 பக்க விபரங்கள் மொத்தம் 653 பக்கங்களில் மட்டுமே இருந்துள்ளது. இதில், 458 பக்கம் வெறுமையாக இருந்தது. அதற்கும் சேர்த்து கட்டணம் வசூலித்துள்ளனர்.
அதேபோல், கலெக்டர் அலுவலகம் வழங்கிய, 181 பக்க விபரங்களில், 151 பக்கம் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 30 பக்கத்துக்கும் கட்டணம் பெற்றுள்ளனர்.
தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான நடவடிக்கையில் அரசு துறை அதிகாரிகள் இது போல முறையற்ற வகையில் செயல்படுவது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.