ADDED : ஜூன் 05, 2025 11:42 PM
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான, இணையவழி கலந்தாய்வு, வரும் 12, 13ம் தேதிகளில், காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில், மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, துறை செயலர் லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.