/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கங்காதீஸ்வரர் கோவில் தேரோட்டம்: புரசையில் போக்குவரத்து மாற்றம் கங்காதீஸ்வரர் கோவில் தேரோட்டம்: புரசையில் போக்குவரத்து மாற்றம்
கங்காதீஸ்வரர் கோவில் தேரோட்டம்: புரசையில் போக்குவரத்து மாற்றம்
கங்காதீஸ்வரர் கோவில் தேரோட்டம்: புரசையில் போக்குவரத்து மாற்றம்
கங்காதீஸ்வரர் கோவில் தேரோட்டம்: புரசையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூன் 05, 2025 11:41 PM
சென்னை : புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவிலில், இன்று தேரோட்ட விழா நடைபெற உள்ளது. நெரிசலை குறைக்கும் விதமாக, காலை 5:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, கோவிலை சுற்றியுள்ள சாலைகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
டவுட்டன் சந்திப்பிலிருந்து கங்காதீஸ்வரர் கோவில் தெரு நோக்கி வரும் வாகனங்கள், ரிதர்டன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, ஈ.வி.ஆர்., சாலை வழியாக செல்லலாம்
புரசைவாக்கத்திலிருந்து கங்காதீஸ்வரர் கோவில் தெரு நோக்கி வரும் வாகனங்கள், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, டவுட்டன் சந்திப்பு, ரிதர்டன் சாலை, ஈ.வி.ஆர்., சாலை வழியாக செல்லலாம்
எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து, ஈ.வி.ஆர்., சாலை வழியாக வரும் வாகனங்கள், தாசபிரகாஷ் சந்திப்பில், அழகப்பா சாலை நோக்கிச் செல்ல தடை விதிக்கப்படும். அவ்வாகனங்கள், ஈகா சந்திப்பு, வாசு தெரு, பர்னபி சாலை, மில்லர்ஸ் சாலை வழியாக செல்லலாம்
பெரம்பூரிலிருந்து பிரிக்லின் சாலை வழியாக, புரசைவாக்கம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. மாறாக, கெல்லிஸ் சந்திப்பு, ஓர்ம்ஸ் சாலை, பொன்னியம்மன் கோவில் சந்திப்பு, ஈ.வி.ஆர்., சாலை வழியாக செல்லலாம்
வெள்ளாள தெரு, ஆடியப்ப தெரு வழியாக தேர் ஊர்வலம் செல்லும்போது, வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
தேர் ஊர்வலம் செல்லும் பாதையில், எந்த வாகனத்தையும் நிறுத்த அனுமதி இல்லை.
வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.