ADDED : மே 22, 2025 12:45 AM
காவல் துறையில், பணியின்போது இறந்த, 115 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.