Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழிலாளர்களுக்கு நாளை பதிவு முகாம்

தொழிலாளர்களுக்கு நாளை பதிவு முகாம்

தொழிலாளர்களுக்கு நாளை பதிவு முகாம்

தொழிலாளர்களுக்கு நாளை பதிவு முகாம்

ADDED : மே 22, 2025 12:43 AM


Google News
கோவை; தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு, 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பல வகையான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள, 18 -60 வயதுடைய தொழிலாளர்கள் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்றுவருகின்றனர்.

இதில், இணையம் சார்ந்த வேலை செய்யும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யும் விதமாக, நாளை மதியம், 3:00 முதல் மாலை, 6:00 மணி வரை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தாமே பதிவு செய்வதற்கு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல்போன் எண், அசல் ஆதார் அட்டை, அசல் ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வயது ஆவணம் ஆகியவற்றுடன், www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம் என, தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us