Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது திமுக தான்": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது திமுக தான்": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது திமுக தான்": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது திமுக தான்": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ADDED : ஜூன் 09, 2024 12:55 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'நீட் தேர்வு ஆபத்தை முதலில் முன்னறிவித்து, அதற்கு எதிராக பரப்புரை செய்தது தி.மு.க., தான்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தயாரித்த அறிக்கையை பல்வேறு மொழிகளில் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு ஆபத்தை முதலில் முன்னறிவித்து அதற்கு எதிராக பரப்புரை செய்தது திமுக தான். நீட் தேர்வின் தீமைகளை அனைவருக்கும் புரிய வைக்க ஏ.கே.ராஜன் தலைமையில் தி.மு.க., குழு அமைத்தது. ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

நீட் தேர்வின் தீமைகள்

ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் படி, நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றினோம். ஏ.கே. ராஜன் குழு தயாரித்த அறிக்கையை ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் வெளியிட்டுள்ளோம். நீட் தேர்வு ஏழைகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரானதை அம்பலப்படுத்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருவதால், நீதிபதி ஏ.கே.ராஜனின் அறிக்கையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நீட் தேர்வின் தீமைகளை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us