தமிழக பா.ஜ., தலைவராக தொடர்கிறார் அண்ணாமலை? தமிழகத்தில் முருகனுக்கு மட்டுமே வாய்ப்பு
தமிழக பா.ஜ., தலைவராக தொடர்கிறார் அண்ணாமலை? தமிழகத்தில் முருகனுக்கு மட்டுமே வாய்ப்பு
தமிழக பா.ஜ., தலைவராக தொடர்கிறார் அண்ணாமலை? தமிழகத்தில் முருகனுக்கு மட்டுமே வாய்ப்பு
UPDATED : ஜூன் 09, 2024 06:06 PM
ADDED : ஜூன் 09, 2024 01:24 PM

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் எத்தனை பேர் மற்றும் யார் யார் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை மத்திய அமைச்சராவாரா என்ற கேள்விக்கு அவர் பா.ஜ., தலைவராகவே தொடர விரும்புவதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
கட்சியை வளர்க்க அண்ணாமலை ஆர்வம்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. ஆனால் இவர் பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற முதல் தமிழகத்தில் செல்வாக்கு சற்று வளர்ந்து வருகிறது. இதனால் எதிர்பார்த்த இலக்கை அடையும்வரை சட்டசபையில் பெரும் வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை செயலாற்றி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ., கட்சியை வளர்க்கவே ஆசைப்படுகிறார்.
இதனால் மாநிலத்தில் கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு வர தேசிய பா.ஜ., தலைவர்களும் முடிவு செய்திருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் அண்ணாமலை பா.ஜ., தலைவராகவே தொடர்வார். அவர் மத்திய அமைச்சராக மாட்டார் என்றும் ஏற்கனவே அமைச்சராக இருந்த முருகன் மட்டுமே மத்திய அமைச்சராக தொடர்வார் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.