ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
UPDATED : ஜூன் 09, 2024 12:43 PM
ADDED : ஜூன் 09, 2024 12:38 PM

மும்பை: மும்பையில், ஏர் இந்தியா விமானம் கிளம்பிய ஓடுபாதையில், இண்டிகோ விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கிளம்பி மேலே பறக்க கிளம்பியது. அந்த நேரத்தில், அதே ஓடுபாதையில், அந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்து ம.பி., மாநிலம் இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது.
இரண்டு விமானங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவாக தான் இருந்தது. ஏர் இந்தியா விமானம் கிளம்பி சென்றது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. நேற்று( ஜூன் 08) நடந்த இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த டிஜிசிஏ உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தூரில் இருந்து வந்த விமானம், விமான நிலையத்தில் அனுமதி கிடைத்த உடன் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளதாக தெரிவித்து உள்ளது.