பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
பயங்கரவாத தடுப்புக்கு 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
ADDED : பிப் 23, 2024 10:08 PM
சென்னை;ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூவருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவு பணி, கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் உளவுத்துறையில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக மகேஷ் பணியாற்றி வருகிறார். இவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக, டி.ஜி.பி., அலுவலகத்தில், அருளரசு பணிபுரி கிறார். இவருக்கு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, தலைமையிடத்து எஸ்.பி., யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
கோவையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக சசிமோகன் பணிபுரிகிறார். இவருக்கு, அந்த பிரிவின் மதுரை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் அமுதா நேற்று பிறப்பித்துள்ளார்.