ஒரே நாளில் 1903 போலீசார் இடமாற்றம்
ஒரே நாளில் 1903 போலீசார் இடமாற்றம்
ஒரே நாளில் 1903 போலீசார் இடமாற்றம்
ADDED : ஜன 05, 2024 01:06 AM
சென்னை:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுதும் 1903 போலீசார் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு, தமிழக காவல்துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதில், சொந்த ஊரில் மற்றும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றிய போலீசாரின் பட்டியலை தயாரிக்க கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஒரே நாளில் தலைமை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், மகளிர் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள் என 1903 பேரை பணியிட மாற்றம் செய்து, காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.