Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விஜயகாந்தின் 16ம் நாள் காரியம் நினைவிடத்தில் அன்னதானம்

விஜயகாந்தின் 16ம் நாள் காரியம் நினைவிடத்தில் அன்னதானம்

விஜயகாந்தின் 16ம் நாள் காரியம் நினைவிடத்தில் அன்னதானம்

விஜயகாந்தின் 16ம் நாள் காரியம் நினைவிடத்தில் அன்னதானம்

ADDED : ஜன 13, 2024 12:33 AM


Google News
சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் 16ம்நாள் காரியத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அன்ன தானம், தவில் வாத்திய இசை நிகழ்ச்சி நடந்தது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால், டிசம்பர் 28ல் காலமானார். அவரது உடல், கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாள்தோறும் அங்கு வந்து பொதுமக்கள், கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் என, பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்தின் 16வது நாள் காரியத்தை ஒட்டி, அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் நின்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட, விஜயகாந்த் போட்டோவிற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

அங்கு வந்தவர்களுக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது. தவில் வாத்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

அப்போது, கருடன் பறந்ததால், வானத்தை நோக்கி விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் கையெடுத்து கும்பிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us