ADDED : ஜூன் 12, 2024 12:37 AM
சென்னை:திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வரும் ஆக., 24, 25ல், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக, https://muthamizhmurugan maanadu2024.com/ என்ற தனி இணையதளம் துவங்கப்பட்டு, பதிவுகள் நடந்து வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்க ஜூலை, 15க்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை வரும், ஜூலை 20க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுஇருந்தது.
தற்போது, ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிப்பதற்கான அவகாசம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.