Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சிறந்த நுால் பரிசுக்கு ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம்

சிறந்த நுால் பரிசுக்கு ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம்

சிறந்த நுால் பரிசுக்கு ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம்

சிறந்த நுால் பரிசுக்கு ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 15, 2024 01:10 AM


Google News
சென்னை:தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படும் சிறந்த நுால்களுக்கான பரிசுக்கு, ஆகஸ்ட், 30 வரை நுால்களை அனுப்பலாம்.

கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திறனாய்வு, நுண்கலைகள், அகராதி உள்ளிட்ட, 33 தலைப்புகளின் கீழ், வெளிவந்துள்ள நுால்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான பரிசுக்கு, எழுத்தாளர் அல்லது பதிப்பாளர், 2023ல் எழுதிய அல்லது பதிப்பித்த நுாலின் ஐந்து படிகளை, 100 ரூபாய் பதிவு கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.

தேர்வாகும் சிறந்த நுாலின் ஆசிரியருக்கு, 30,000 ரூபாயும், அதை பதிப்பித்த பதிப்பகத்துக்கு, 10,000 ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். போட்டிக்கான நுால்களை, ஆகஸ்ட், 30க்குள், 'இயக்குனர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், முதல்தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர் - 8' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us