சிறு தொழில் சங்கங்களுக்கு அமைச்சர் உறுதிமொழி
சிறு தொழில் சங்கங்களுக்கு அமைச்சர் உறுதிமொழி
சிறு தொழில் சங்கங்களுக்கு அமைச்சர் உறுதிமொழி
ADDED : ஜூன் 15, 2024 01:09 AM
சென்னை:குறு, சிறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன், அமைச்சர் அன்பரசன் நேற்று பேச்சு நடத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள, 'சிட்கோ' வளாகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று பல்வேறு குறு, சிறு தொழில் நிறுவன சங்கங்களுடன் பேச்சு நடத்தினார். அதில், துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு மின்சார நிலை கட்டண உயர்வை திரும்ப பெறுவது, 'சிட்கோ' வாயிலாக புதிய தொழிற்பேட்டைகளை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, அமைச்சர் அன்பரசிடம் தெரிவிக்கப்பட்டது.
அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனே நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண்பதாக, அவர் உறுதி அளித்தார். அமைச்சர் உடனான பேச்சு, தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாக, 'டான்ஸ்டியா' எனப்படும், தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவர் மோகன் கூறினார்.